நிலநடுக்கத்தால் மலேசிய விமானம் கடலில் விழுந்ததா? - புதிய தகவல்
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் தென் சீனக் கடற்பகுதிக்கு மேலே பறந்தபோது மாயமானது. ஒரு வாரமாக தேடுதல் பணிகள் நடைபெற்றும் அந்த விமானம் எங்கு விழுந்தது? அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. தற்போது அந்தமான் கடற்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விமானம் மாயமானது தொடர்பாக பல்வேறு யூக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நிலநடுக்கம் காரணமாக விமானம் இழுக்கப்பட்டிருக்கலாம் என்ற புதிய சந்தேகமும் எழுந்துள்ளது.
தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, விமானம் கடைசியாக காணப்பட்ட இடத்தில் இருந்து 72 மைல்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதுவும், விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மலேசியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதன் காரணமாக விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்றும் சீனாவின் நிலநடுக்க ஆராய்ச்சிக் குழுவினர் நம்புகின்றனர்.
No comments: