உத்தம வில்லன்’ மலையாளப் படத்தின் காப்பியா..? : தொடரும் புதிய குழப்பங்கள் !
எந்த நேரத்தில் கமல் ‘உத்தம வில்லன்’ என்று படத்துக்கு டைட்டில் வைத்தாரோ..? முதல்நாள் போஸ்டரே அவருக்கு வில்லனாக மாறிவிட்டது.
‘உத்தம வில்லன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே இது ஒரு பிரான்ஸ் நாட்டு புகைப்படக்காரர் எடுத்த கேரள புகைப்படம் என்ற உண்மையை ஒட்டுமொத்த மீடியாக்களும் தோலுரித்துக் காட்டி விட்டன.
மேலும் அதற்கு ஆதரவான கருத்துகளும், எதிர்ப்பான கருத்துகளும் தொடர்ந்து வருகின்ற நேரத்தில் தான் “‘உத்தம வில்லன்’ படத்தின் போஸ்டரை விடுங்கள், அந்தப்படமே ஒரு மலையாளப் படத்தில் அப்பட்டமான காப்பியாக இருக்குமோ..?” என்ற சந்தேகத்தை கிளப்பி விடுகின்றனர் சில ‘விஷயம்’ தெரிந்த மலையாள திரையுலகினர்.
anumol உத்தம வில்லன் மலையாளப் படத்தின் காப்பியா..? : தொடரும் புதிய குழப்பங்கள் !
சாயில்யம் படத்தில் தெய்யம் கலைஞராக நடித்த அனுமோல்
அவர்கள் சொல்லுவதாவது…
கேரளாவின் பாரம்பரிய கலைகளில் ஒன்று தான் ‘தெய்யம்’. அந்தக் கலையைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஒரு இளைஞர். வடக்கு மலபாரைச் சேர்ந்த அந்த இளைஞர் தனது ஆசையை தனது நண்பர்களிடம் சொல்ல, உடனே அந்த இளைஞர்கள் தங்கள் நண்பனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு படம் தயாரிப்பதென முடிவு செய்கிறார்கள்.
உடனே அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கையில் ஆளுக்கொரு வாளியை எடுத்துக் கொண்டு (கம்யூனிஸ்ட் கட்சியின் பாணியில்) வீடு வீடாகச் சென்று பண வசூல் செய்கிறார்கள். அந்தப் பணத்தில் தயாரான படம் தான் ‘சாயில்யம்’. அவார்டு படங்கள் என்று முத்திரை குத்தப்படும் படங்கள் பொதுவாக தியேட்டரின் வாசல் வரை கூட வருவதில்லை. தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான். பட விழாக்களுக்களோடு அந்தப் படங்களின் திரையிடல் நின்று போய்விடும்.
FOR FB 251x300 உத்தம வில்லன் மலையாளப் படத்தின் காப்பியா..? : தொடரும் புதிய குழப்பங்கள் !
’உத்தம வில்லன்’ படத்தில் தெய்யம் கலைஞராக நடிக்கப் போகும் கமல்
ஆனால் பாரம்பரிய கலையைப் பற்றி படமெடுக்க வேண்டும் என்று களத்தில் இறங்கிய அந்த இளைஞர்களின் முயற்சியைப் பாராட்டிய கேரள அரசும், அங்குள்ள மீடியாக்களும் அந்தப்படத்துக்கு பப்ளிசிட்டி உள்ளிட்டவைகளில் பலமான ஆதரவைத் தந்தன. அதன் விளைவாக கேரளாவில் உள்ள சில தியேட்டர்களில் ‘சாயில்யம்’ படம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ரிலீசானது. ஆனால் படம் 4 நாட்கள் மட்டுமே ஓடியது. இந்தப் படத்தில் ஹீரோயின் அனுமோலைத் தவிர மற்ற புகழ்பெற்ற நடிகர், நடிகர் யாரும் கிடையாது. அனுமோலும் கூட இந்தப் படத்தில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை.
ஹீரோயின் அனுமோல் ஏற்கனவே ‘ராமர்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்பு பட வாய்ப்புகள் அமையாமல் மலையாளத்துக்கு திரும்பிச் சென்றவர் தான். அங்கு அவரது நடிப்புத் திறமையை கண்காணித்த ஜி.பாலகுமார் என்ற தமிழ்ப்பட டைரக்டர் கிஷோருக்கு ஜோடியாக ‘திலகர்’ என்ற தமிழ்ப்படத்தில் அவரை மீண்டும் தமிழுக்கு கூட்டி வர இருக்கிறார்.
படத்தில் ஹீரோயின் அனுமோலும் அவருக்கு தேசிய விருதை சிபாரிசு செய்யும் அளவுக்கு ‘தெய்யம்’ கலையை அப்படியே முழுமையாக பிரதிபலித்திருந்தார். ஆனால் இறுதிச் சுற்றில் ஒரே ஒரு ஓட்டில் அந்த விருது கை நழுவிப் போனது.
Lamiya Studio Inauguration stills 10 300x230 உத்தம வில்லன் மலையாளப் படத்தின் காப்பியா..? : தொடரும் புதிய குழப்பங்கள் !
நடிகை அனுமோல்
முழுக்க முழுக்க ‘தெய்யம்’ கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை தான் இப்போது அதே கெட்டப்பில் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீஸரையும் வெளியிட்ட ‘உத்தம வில்லன்’ படத்தின் கதை என்று மலையாள திரையுலகினர் அடித்துச் சொல்கிறார்கள். கதகளியைப் போல தெய்யம் கலையை யாருமே அவ்வளவு சீக்கிரத்தில் கற்றுக் கொள்ள முடியாது. அந்தக் கலையை கற்றுக் கொள்ள விரதம் உள்ளிட்ட சில ஆச்சாரமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். மேலும் முகத்தில் ஏகப்பட்ட பாவங்களை காட்ட வேண்டிருக்கும். இந்தக் கலையை கமல் மாதிரியான ஒரு திறைமை வாய்ந்த நடிகர் காட்டி விடலாம் தான்.
ஆனால் ஏற்கனவே அனுமோல் என்கிற ஒரு நடிகையே ஒரு படத்தில் இந்தக் கலையின் அத்தனை அபிநயங்களையும் முகத்தில் காட்டிவிட்ட பிறகு பத்து அவதாரங்களை காட்டிய உலக நாயகனுக்கு மெனக்கிட உத்தம வில்லனில் என்ன இருக்கிறது என்பது தான் கேள்வியாய் இருந்தாலும்..
இன்னொருபுறம் இதை முழுமையாய் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை..
ஒரு கதாநாயகியை மையப்படுத்தி ஆர்ட் பிலிமாக எடுக்கப்பட்ட மலையாளப் படத்தின் கதையை எப்படி கமல் போன்ற மெகா பட்ஜெட் கதாநாயகனை வைத்து மீண்டும் எடுக்கமுடியும். அதுவும் அங்கேயே 5 நாட்களுக்கு மேல் ஓடாத படத்தை? என்ற கேள்வி நமக்கும் வரத்தான் செய்கிறது. மேலும் உத்தம வில்லனின் மற்ற போஸ்டர்கள் சொல்லும் கதை வேறுமாதிரியாகவும் இருக்கிறது.
கமலின் அசாத்திய நடிப்புத்திறமையை ரசிக்கும் அனைவரும் விரும்புவது அவருக்கு தொடர்ந்து இந்த காப்பி அவமானங்கள் வராமல் கௌரவமான கலைப்படைப்புகளும், வெற்றிகளும் தொடரவேண்டும் என்பதுதான்.
No comments: