திரை விமர்சனம் வல்லினம்..video
சிலர் சுயநலத்துக்காக படம் எடுப்பார்கள் இன்னும் சில பேர் வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்று தன்னை தக்கவைத்து கொல்வதற்காக படம் எடுப்பார்கள். |
ஆனால் ஒரு சிலர் மட்டுமே பொதுநலத்துக்காகவும், எதோ விதத்தில் இந்த படைப்பு உலகில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்பதற்காக எடுப்பார்கள். அந்த வரிசையில், சமூகத்தில் உள்ள சில சுயநலக்காரர்களின் பண போதையில், விளையாட்டு எவ்வாறு வணிக ரீதியாக மாறுகிறது என்பதையும் சமூகத்தின் பார்வையில் இன்று வரை விளையாட்டு வீரர்கள் ஒரு பணம் கொட்டும் வியாபாரமாக தான் கருதப்படுகிறார்கள் என்ற கதைக்கருவினை மையமாக கொண்டு ‘வல்லினம்’ என்ற படைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஈரம் என்ற திகில் வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த அறிவழகன் எண்ணத்தில் உருவான படம் ‘வல்லினம்’. படத்தோடு மைய புள்ளியாக இதுவரை தமிழ்நாட்டுக்கு அவ்ளோ பரிச்சியம் இல்லாத பாஸ்கட் பால் தீம்மை கையாண்டு இருக்கிறார். எந்த வித புயல்டுப் அறிமுகம் இல்லாமல் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தன் ரயிலுக்காக கார்த்து கொண்டு இருக்கிறார் நகுல். அப்பொழுது ஒரு சிறிய ப்ளாஷ்பேக் கதையோடு நகர்கிறது படம், நகுலும் – கிருஷ்ணாவும் (சிறப்பு தோற்றத்தில்) நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் சிறந்த பாஸ்கெட்பால் வீர்கள். இந்நிலையில், ஒரு நாள் நடைபெற்ற பாஸ்கெட்பால் விளையாட்டில் எதிர்பாரத விதமாக நகுலின் வேகத்தால் தன் நண்பனை இழந்துவிடுகிறார். இதனால் சோகம் கொண்ட நகுல், ஊரும் வேண்டாம் இந்த கல்லூரியும் வேண்டாம் என்று பாஸ்கெட்பாலை எரிந்து விட்டு சென்னைக்கு தனது படிப்பை தொடர புறப்படுகிறார். சென்னை நேஷனல் கல்லூரியில் படிக்க வந்த இடத்தில் குணா, ஜெகன் போன்றவர்களின் நட்பு கிடைக்கிறது. பிறகு எப்பொழுதும் போல கூத்து, கும்மாளம், நட்பு, காதல் என்று கல்லூரிக்கே உண்டான பாணியில் கதை நகர ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பர்களும் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரர்கள் என்பது தெரிய வந்தும் தனக்கு அவ்விளையாட்டை பற்றி தெரியாது எனும் தோனியிலேயே நடந்து கொள்கிறார் நகுல். கிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் தரும் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சேர்மேன் மற்றும் கிரிக்கெட் வீரரான சித்தார்த்துடன் இவர்கள் நன்பர்களுக்கு ஏற்படும் மோதல் கிரிக்கெட் பெரியதா, பாஸ்கெட்பால் பெரியதா எனும் போட்டியில் வந்து நிற்கிறது. தனது இறந்த நண்பனுக்காக பாஸ்கெட்பால் விளையாட்டை கைவிடும் நகுல், தனது புதிய நண்பர்களுக்காக திரும்புவும் களமிறங்குகிறார். இந்த போட்டியில் யார் வென்றார்கள் மற்றும் விளையாட்டு எவ்வாறு வியாபாரம் ஆகிறது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ். நகுல் நடித்த படத்திலே மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் வல்லினம் தான் , இப்படத்திற்காக நடிப்பில் நிறைய மாறுதல்களைச் செய்திருக்கிறார் நகுல். ஒரு பாஸ்கெட்பால் விளையாட்டு வீரராக மிகவும் சிரத்தையுடன் பயிற்சி எடுத்து நடித்துள்ளார். விளையாட்டை நேரில் பார்த்த உணர்வை தருகிறார்கள் அவரும், அவரது நண்பர்களாக வரும் அம்ஜத், சீனியர் வீரர் மற்றும் எதிரணியில் வரும் மதிவாணன் ஆகியோர். இருப்பினும் பாஸ்கெட்பால் விளையாட்டு பற்றி தெரிந்தவர்களுக்கு ஏமாற்றமே. கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மிருதுளாவிற்கு வழக்கமாக (பணக்கார பெண்) கதாநாயகனை காரணமே இல்லாமல் காதலிக்கும் வேலை மட்டுமே கொடுத்திருப்பதால் நடிப்பிற்கு பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது. வில்லனாக வரும் சித்தார்த் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மேலும் ஆதி, அது குல்கரனி, ஜே.பி, கிருஷ்னா, அனுபமா என நடிகர் பட்டாளம் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர். படத்தின் தொழில்நுட்பம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எஸ்.எஸ். தமன் இசையில் பாடல்கள் சலித்து போனது, ஆனால் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் தமன். அறிமுக ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், தன் முதல் படத்திலேயே யார் இந்த பாஸ்கரன் என்ற கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகவும் மற்றும் நேர்த்தியாகவும் காட்சிபடுத்தியிருக்கிறார். ஒரு உன்னதமான படைப்புக்கு கண்டிப்பாக தோள் கொடுத்து தூக்க வேண்டும், அந்த வகையில் இது போன்ற படைப்பினை கொடுத்த அறிவழகனின் முயற்சியை பாராட்டலாம். மொத்தத்தில் வல்லினம் ஒரு உணர்ச்சி மிகையான உண்மையான படம் ஆனால் கமர்ஷியல் கலவை சேர்க்காமல் இருந்திருந்தால்! மொத்தத்தில் விளையாட்டிற்கு கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. நடிகர்: நகுல் நடிகை: மிருதுலா பாஸ்கர் இயக்குனர்: அறிவழகன் இசை: தமன் ஓளிப்பதிவு: பாஸ்கர் தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ் |
முன்செல்ல |
No comments: