Header Ads

ஒபாமாவும், மிஷலும் சுற்றுலா சென்ற செலவு ரூ. 11,157 கோடி! video

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷல் ஒபாமாவும் சேர்ந்து அமெரிக்காவின் பல இடங்கள் மற்றும் உலக நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட செலவு மட்டும் ரூ. 11,157 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
தங்குமிடம், சாப்பாடு, வாடகை, பாதுகாப்பு செலவு உள்ளிட்ட அத்தனை செலவுகளும் இதில் அடக்கமாம். அமெரிக்காவில் நிதிப் பிரச்சினை தலை விரித்தாடிய நிலையில், இன்னும் நிலைமை சீராகாத நிலையில், சிக்கனத்தை அதிபரே வலியுறுத்தும் போது, அவர் மட்டும் இப்படிச் செலவு செய்யலாமா என்ற கோஷம் அங்கே எழுந்துள்ளதாம்.
வாஷிங்டன் எக்ஸாமினர் என்ற பத்திரிக்கையில் பால் பெடார்ட் என்பவரால் இந்த செலவுக் கணக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒபாமாவும், மிஷலும், அதிபர் பதவிக்கு ஒபாமா வந்த பின்னர் மொத்தம் 22 இடங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், அதிகாரப்பூர்வமாகவும் பயணித்துள்ளனர்.
ஹவாய், மார்த்தா வின்யார்ட், ஸ்பெயின், கொலராடோ, புளோரிடா, ஆப்பிரிக்கா என பல இடங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஒபாமாவின் இந்த செலவுகள் குறித்து அமெரிக்காவின் ஜூடிசியல் வாட்ச் என்ற அரசு சார்ந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஒபாமா, மிஷலின் பயண விவரங்கள், செலவுகள் குறித்த ஆவணங்களை அது கோரியுள்ளது. ஆனால், அதில் பாதிதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

No comments:

Powered by Blogger.