Header Ads

மான் கராத்தே' படத்தில் டான்ஸ் ஆடிய அனிருத்!

முருகதாஸ் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் படம் 'மான் கராத்தே'. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்காக ஒரு கானா பாடலை உருவாக்கியுள்ளார்  அனிருத்.

இந்தப் பாடலை பாட, வித்தியாசமான குரலைத் தேடிய அனிருத்துக்கு உடனே நினைவுக்கு வந்தவர் இசையமைப்பாளர் தேவா.அவரைத் தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவித்தபோது உடனே சம்மதித்துப் பாடி கொடுத்துள்ளாராம்.



'படத்தின் க்ளைமாக்ஸில் இடம் பெறும் இப்பாடல் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடலாக அமையும்' என்று கூறியுள்ளார் அனிருத். மேலும், இந்தப் பாடலில் சிவகார்த்திகேயனுன் அனிருத்தும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார்.

'எதிர் நீச்சல்' படத்தில் ஒரு பாடலுக்கு வந்து போன அனிருத் 'வணக்கம் சென்னை' படத்தில் சென்னை கேங்ஸ்டர் பாடலில் ஆடினார். தற்போது 'மான் கராத்தே' படத்துக்காக ஒரு பாடலுக்கு  டான்ஸ் ஆடியிருக்கிறார்.

No comments:

Powered by Blogger.