Header Ads

செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் அஜித்- கௌதம் படம்!

இப்போதிருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக் கௌதம் படத்தில் இருக்கக் கூடாதென்று ரொம்பவே மெனக்கெடுகிறார் அஜித். அதுமட்டும் இல்லாமல், ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிலேயே பழியாகக் கிடக்கிறார்.
மார்ச் மூன்றாம் வாரத்திற்குள் ஷூட்டிங் நடத்த கௌதம் மேனன் திட்டமிட்டு இருக்கிறார். ஹீரோயினாக அனுஷ்கா நடிப்பாரா? இல்லையா? என்ற குழப்பம் நிலவி வந்தது. ஆனால், இதுவரைக்கும் அனுஷ்காதான் ஹீரோயின் என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லையாம்.
அனிருத் இசையமைக்க இருப்பதால் 'தல 55' படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலாவது இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதால், ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இன்னும் ஷூட்டிங் தொடங்காத நிலையில், செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பது ஆச்சர்யம்தான்.

No comments:

Powered by Blogger.