Header Ads

லண்டன் பாலியல் தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு எதிராக பெற்ற வெற்றி

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மத்திய லண்டனின் சோஹோ பகுதியில் உள்ள புரூவர் தெருவின் 18 குடியிருப்பு வளாகங்கள் காவல்துறையினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அங்கிருந்த பாலியல் தொழிலாளர்கள் பணத்திற்காக இந்தப் பகுதியைத் தங்களின் கட்டுக்குள் வைத்திருந்ததாகக் கருதிய காவல்துறையினர் மோப்ப நாய்களுடனும், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடனும் அந்த வளாகத்தினுள் புகுந்து அங்கிருந்த பெண்களைக் கைது செய்தனர். அதன்பின்னர் அந்தக் குடியிருப்பு பகுதிகளும் மூடப்படுவதாக அறிக்கை விடப்பட்டு ஹாமர்ஸ்மித் நீதிபதிகள் மன்றத்தின் மாவட்ட நீதிபதி ஒருவரால் உறுதியும் செய்யப்பட்டது.

ஆறு மாதங்கள் வரை இந்தப் பகுதியை மூடுவதற்கான அதிகாரத்தை காவல்துறைக்கு அளித்திருந்த நீதிமன்றம் இங்கு பணத்திற்காக விபசாரம் தூண்டப்பட்டதையும் மற்றும் அதுதொடர்பான குற்றங்களையும் நிரூபிக்கும்படி கேட்டிருந்தது. தற்போது கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. விசாரணை முடிவில் பரஸ்பர ஒப்புதலின் பேரில் மற்ற பாலியல் தொழிலாளர்களுடன் இணைந்து தங்களுக்கு வசதியான மற்றும் இசைவான நேரங்களில் அங்கிருந்த பெண்கள் அந்த குடியிருப்பின் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளை உபயோகப்படுத்தியுள்ளனர். இந்த செயல்கள் பாலியல் குற்ற சட்டத்தின் கீழ் வராது என்று குறிப்பிட்ட நீதிபதி கிங்ஸ்டன் மூடியிருந்த குடியிருப்பை மீண்டும் திறக்கும்படி உத்தரவிட்டார்.

சோஹோ குடியிருப்புப் பகுதியில் எந்த மனிதக் கடத்தல்களுக்கான நடவடிக்கையும் காணப்படவில்லை. எனவே இத்தகைய மூடல்களைக் காவல்துறை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது காவல்துறை மக்களிடம் வெளிப்படுத்திய தவறான நடவடிக்கையாகும். மேலும், இந்தப் பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருமானமில்லாமல் கடன் சுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் சமூகத்தின் ஆதரவுடனும், வாடிக்கையாளர்களுக்கான காமிரா கண்காணிப்புடனும், பணியாளர் மற்றும் வரவேற்பாளர் போன்றோரையும் கொண்டிருந்த சோஹோ குடியிருப்பு பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாகவே இருந்துள்ளது என்று பாலியல் தொழிலாளர்களின் கூட்டுக் குழுவின் நிக்கி ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Powered by Blogger.