Header Ads

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்...!

காமாவை எரித்தல்
சதி தேவியின் இறப்புக்கு பின், அவரின் மறைவை எண்ணி சிவபெருமான் மீளா துயரத்தில் மூழ்கினார். அதனால் ஒரு குகைக்கு சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அப்போது தான் சதி தேவி மீண்டும் பார்வதி தேவியாக பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்ய தயாரானார். ஆனால் கடவுள்கள் தீவிர முயற்சி செய்தும் கூட, சிவபெருமானை அவரின் தவத்தில் இருந்து எழுப்ப முடியவில்லை.அப்போது, சிவபெருமானின் தவத்தை களைக்க, காதல் கடவுளான, காமா தேவி அனுப்பி வைக்கப்பட்டார். காமா சிவபெருமானை அம்பு மூலமாக தாக்கிய போது, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்து, காமாவை எரித்து சாம்பலாக்கினார்.

நெற்றிக்கண்ணின் முக்கியத்துவம்
சிவபெருமானின் நெற்றிக்கண் ஆசைகளை நிராகரிப்பதை குறிக்கும். அது காதல் மற்றும் ஆசைகளின் கடவுளான காமாவை கொன்றது. நாம் ஆசைப்பட்டது நம்மை விட்டு போகும் போது, அது நம்மை மீளா துயரத்தில் தள்ளி விடும் என்பதை சதியின் மறைவில் அவர் உணர்ந்ததால் தான் ஆசையை நிராகரிக்கிறார். அதனால் ஆசைகளிடம் இருந்து விலகியிருந்தால், அதுவே பேரின்பத்தை பெறும் சிறந்த வழியாக கருதப்படுகிறது.

அந்தகா கதை
சிவபெருமானின் நெற்றிக்கனுக்கு மற்றொரு கதையும் உண்டு. ஒரு முறை, சிவபெருமானின் கண்களை தன் கைகளால் பார்வதி தேவி விளையாட்டாக மூடினாராம்.அப்போது இந்த அண்ட சராசரமே இருளில் மூழ்கி போனதாம். அதனால் இந்த உலகத்திற்கு வெளிச்சத்தையும் ஆற்றலையும் அளிக்க, சிவபெருமான் தன் நெற்றிகண்ணை திறக்க வேண்டியாக ஆயிற்று என்று நம்பப்படுகிறது.சிவபெருமானின் நெற்றிக்கண் வெப்பம் பார்வதி தேவியின் கைகளை வியர்க்க வைத்ததாம். அந்த வியர்வையின் ஒரு துளி மண்ணில் விழுந்த போது, அது ஒரு குழந்தையாக உருமாறியது. அந்தகா என்றழைக்கப்பட்ட அந்த குழந்தையை, சிவபெருமானை வழிப்பட்டு வந்த குழந்தையில்லா ஒரு அசுரனுக்கு தத்து கொடுத்தனர். தன் பிறப்பை பற்றிய உண்மை தெரியாமல் வளர்ந்தான் அந்தகா. தன் தாயின் மீது காமவெறி உருவானால், தன் தந்தையால் தான் கொல்லப்பட வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றுக்கொண்டான்.
இந்த வரத்தை பெற்ற அந்தகா, உலகத்தின் மீது படையெடுத்து வெற்றிக்கொள்ள கிளம்பினான். அப்படி செல்லும் வேளையில், பார்வதி தேவியை சந்தித்து அவரின் அழகில் மயங்கினான். அவரை விரட்டி சென்றதால், சிவபெருமானால் கொல்லப்பட்டான்.உலகத்தில் நிலவும் அனைத்து விதமான ஆசைகளையும் நிராகரிக்கும் நெற்றிக்கண்ணின் இருட்டு பக்கத்தை இந்த கதை வெளிக்காட்டுகிறது. அதற்கு காரணம் மனித இனம் வாழ்வதற்கு ஆசைகள் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. ஆசைகள் இல்லாமல் போகும் போது, இந்த உலகமே ஸ்தம்பித்து விடும்; இனப்பபெருக்கமும் இருக்காது, தலைமுறை புதுப்பித்தலும் இருக்காது.அதனால் சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. மேலும் மனித இனத்திற்கு அது அறிவை அளிக்கும் மூலமாகவும் விளங்குகிறது.

No comments:

Powered by Blogger.