Header Ads

நடிகையின் மார்பை பிடித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை..

நடிகைகள் கடைதிறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ரசிகர்கள் சிலர் நடிகைகளிடம் சில்மிஷம் செய்வது நம்மூரில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் சிலசமயம் நடந்து வருகிறது.


பிரபல அமெரிக்க நடிகை  Sarah Hyland ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் அவரை பார்க்க கூடினர். ஒரு ரசிகர்  Sarah Hyland  அருகில் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினார். அதற்கு ஒப்புக்கொண்ட  Sarah Hyland, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த ரசிகர் திடீரென நடிகையின் மார்பகத்தை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அந்த ரசிகரை கைது செய்த ஆஸ்திரேலிய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். அவர் மீது பொது இடத்தில் பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்த சட்டப்பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

29 வயதான அந்த ரசிகரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

1990ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த  Sarah Hyland, என்ற நடிகை Modern Family, Geek Charming, போன்ற பல டிவி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருடைய டிவி சீரியல்களின் டிவிடிகள் உலகம் முழுவதும் விற்பனையாகி வசூலை குவித்து வருகிறது. காமெடி காட்சிகளில் சிறப்பாக நடிப்பதுதான் இவருடைய தனிச்சிறப்பு.

No comments:

Powered by Blogger.