கணவின் நோயை குணபடுத்துவதாக கூறி மனைவி கற்பழிப்பு ரூ.1. கோடி மோசடி போலி மந்திரவாதி கைது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விசாலி நகரை சேர்ந்தவர் எண்ணை நிறுவனம் நடத்தி வருபவர் ஒருவர் முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மிகுந்த சிரமபட்டு வந்தார். அவரது மனைவி அவரை பல்வேறு மருத்துவமனைகளில் காட்டி சிகிச்சை அளித்தார் இருந்தும் குணமாகவில்லை
இந்த நிலையில் ராம் சேவக் திவாரி என்ற மந்திரவாதி இருப்பதாகவும் அவர் உனது கணவனின் நோயை குணப்படுத்துவார் என அக்கம்பக்கம் உள்ள பெண்கள் கூறினர் இதை கேட்டு அவர் அந்த மந்திரவாதியை அணுகினார். மந்திரவாதியும் சில நாட்கள் அப்படி இப்படி புஜை செய்து ஏமாற்றினார். அவருக்கு உதவியாக இருந்த ஆனந்த் குமாரி,லலித் குமாரி,புஜா திவாரி ஆகிய 3 பெண்களும் பல பூஜைகளை செய்ய வேண்டும் அப்போது தான் உனது கணவனின் நோய் குணமாகும் என கூறி ரூ.1.21 கோடி வரை அந்த பெண்ணிடம் பறித்தனர். மந்திரவாதி இரவு பூஜை செய்யவேண்டும் என கூறி அந்த பெண்ணை கற்பழித்தார்.
பணத்தை இழந்தும் கற்பை இழந்தும் கணவனின் நோய் குணமாகவில்லை இதை தொடர்ந்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் போலி மந்திரவாதி ராம் சேவக்கையும் அவருக்கு துணையாக இருந்த 3 பெண்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 420, 384 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தொடரந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: