மீண்டும் தொடங்குகிறது இது நம்ம ஆளு!
பல வருட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நயன்தாரா இருவரும் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றநிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவில்லை. எனவே, இது நம்ம ஆளு படம் ட்ராப் என்று திரையுலகில் பேசப்பட்டு வந்தது. இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவை சிம்பு தனக்கு ஜோடியாக்கியதே அவருடன் மறுபடி காதலை புதுப்பிக்கத்தான் என்றும், சிம்புவின் திட்டம் பலிக்கவில்லை என்றும், அந்த கடுப்பில்தான் இது நம்ம ஆளு படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கப்போய்விட்டார் சிம்பு என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் மே 25 முதல் இது நம்ம ஆளு படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக திரையுலகில் தகவல் அடிபடுகிறது. சிம்பு உடன் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டதே இரண்டு கோடி சம்பளத்துக்காகத்தான் என்றும், எனக்கு சிம்புவும் ஒண்ணுதான் சிவகார்த்திகேயனும் ஒண்ணுதான் என்றும் நயன்தாரா அடித்த கமெண்ட்டுகள் சிம்புவை விரக்தியடைய வைத்திருந்தது. அதன் காரணமாக நயன்தாரா மீது செம கடுப்பிலும் இருந்தார் சிம்பு என்று சொல்லப்பட்டது.

No comments: