Header Ads

வீடு கிடைக்க பரிகார பூஜை செய்வதாக ஏமாற்றி நடிகையை கற்பழித்த மந்திரவாதி கைது; ரூ.26 லட்சம் மோசடி செய்ததும் அம்பலம்

மகாடாவில் வீடு கிடைக்க பரிகார பூஜை செய்வதாக ஏமாற்றி, டி.வி. நடிகையை ஏமாற்றி கற்பழித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.26 லட்சம் மோசடி செய்ததும் அம்பலமானது.
மகாடா குலுக்கல்
மும்பை சார்க்கோப் பகுதியை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை ஒருவர் மராட்டிய அரசு கட்டிவரும் மகாடா குடியிருப்பில் வீடு வாங்க ஆசைப்பட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை அனுப்பி முடிவுக்காக காத்து இருந்தார். ஆனால் நடிகைக்கு மகாடா குடியிருப்பில் வீடு கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆன்மிக பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என பலர் கூறியதன் பேரில், கடந்த 2013–ம் ஆண்டு பகவான்தாஸ் என்ற மந்திரவாதியை சந்தித்தார். பூஜை செய்தால் மகாடா குலுக்கலில் உங்களுக்கு கட்டாயம் வீடு கிடைக்கும் என கூறி, மந்திரவாதி பகவான்தாஸ் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு பூஜைகள் செய்தார். ஆனால் அடுத்த குலுக்கலிலும் டி.வி. நடிகைக்கு மகாடா வீடு கிடைக்கவில்லை.
டி.வி. நடிகை கற்பழிப்பு
இதனையடித்து டி.வி. நடிகை மாகிம் பகுதியை சேர்ந்த இப்ராகிம் அசிம்கான்(வயது35) என்ற மற்றொரு மந்திரவாதியை சந்தித்து அவரது உதவியை நாடினார். இதனையடுத்து மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் சக்தி வாய்ந்த பரிகார பூஜை செய்தால் உங்களுக்கு குலுக்கலில் நிச்சயம் வீடு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பிய நடிகையிடம் இருந்து மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் பூஜை செய்வதாக கூறி, பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.26 லட்சத்தை பெற்றுக்கொண்டார். மேலும் பூஜை என்ற பெயரில் இப்ராகிம் அசிம்கான் கடந்த 2 வருடமாக டி.வி. நடிகையை ஏமாற்றி கற்பழித்தார்.
போலி மந்திரவாதி கைது
இதற்கிடையில் 4–வது முறையாக மகாடா அறிவித்த குலுக்கலிலும் டி.வி. நடிகைக்கு வீடு கிடைக்கவில்லை. இதனையடுத்து மந்திரவாதி இப்ராகிம் தலைமறைவு ஆனார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடிகை கடந்த 9–ந்தேதி சார்க்கோப் போலீஸ் நிலையத்தில் மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் மீது புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மந்திரவாதி இப்ராகிம் அசிம்கானை தேடி வந்தனர். இந்தநிலையில் மாகிம் தேவாலயம் அருகே உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் போலி மந்திரவாதி இப்ராகிம் அசிம்கானை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

No comments:

Powered by Blogger.