Header Ads

அரண்மனைக்காக 4 மாதங்களாக நடக்கும் கிராபிக்ஸ் பணிகள்..

கலகலப்பு ஹிட்டுக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி வரும் படம் அரண்மணை. சுந்தர்.சிதான் ஹீரோ. ஆனால் அவருக்கு ஜோடி கிடையாது. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று ஹீரோயின்கள். கோவை சரளா, சந்தானம், சந்தான பாரதி என காமெடி பட்டாளங்கள் நிறைந்திருக்கிறார்கள். ஐதராபத்தில் அரண்மனை செட் போட்டும், பொள்ளாச்சி, காரைக்குடியில் அரண்மனையின் வெளிப்பகுதி படப்பிடிப்பையும் ஒரே வேகத்தில் முடித்து விட்டார் சுந்தர்.சி. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது.

ஒரு பெரிய குடும்பத்துக்கு தங்கள் பூர்வீக கிராமத்தில் அரண்மனை மாதிரி வீடு ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். எல்லோருமாக சேர்ந்து அந்த அரண்மனையினை விற்க முடிவு செய்கிறார்கள். விற்பதற்கு முன் கடைசியாக ஒருமுறை அந்த அரண்மனையில் கூடி கும்மாளமடிக்க திட்டமிடுகிறார்கள். அப்போது அங்கு நடக்கும் விபரீத திகில் சம்பவங்களை காமெடியாக சொல்லும் படம்.

சந்திரமுகி படத்தில் ரஜினி மனோதத்துவ நிபுணராக நடித்த மாதிரி இதில் சுந்தர்.சி நடித்திருக்கிறார். அவரை துரத்தி துரத்தி காதலிப்பவராக ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். கடைசியில் சுந்தர் சி.கேரக்டர் மீது ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிற மாதிரியான கதை என்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.