Header Ads

காதலியை கொலை செய்து பின் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கொடூர வாலிபர்கள் கைது

தென்மேற்கு டெல்லியில் உள்ள பிந்தாபூர் பகுதியில் 19 வயது மதிக்க தக்க இளம்பெண் ஒருவர் பிணத்தை கடந்த மாதம் டெல்லி  போலீசார் ஒரு வீட்டின் பீரோ ஒன்றில் இருந்து கண்டெடுத்தனர். அந்த பெண் கழுத்தை நெறித்து கொலை செய்து  பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர். அதில் ஒருவர் பெயர் முகமது ரபிக் ஆகும்.

இந்த கொலை தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிந்தாபூர் பகுதியில் கடந்த சிலமாதங்களாக இந்த பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் வசித்து வந்து உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் உள்ளருடன் இவருக்கு பழக்கமாகி உள்ளது அதுவே காதலாகி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர். ஆனல் இது அவரது ஆண் நண்பருக்கு பிடிக்க வில்லை.

இதில் கோபம் அடைந்த் ஆண் நண்பர் தனது நண்பருடன் கடந்த் ஏப்ரல் 29 ந்தேதி அந்த பெண்ணை கொலை செய்து உள்ளனர்.பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பின்னர் அவரது உடலை ஒரு பீரோவில் வைத்து பூட்டி விட்டனர். வீட்டு ஓனர் பூட்டி கிடக்கும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.இதை தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றினர்

No comments:

Powered by Blogger.