Header Ads

ரகசிய திருமணம்?: சித்தார்த் வீட்டில் குடியேறிய சமந்தா..

நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படங்கள் மூலம் சமந்தா பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது விஜய் ஜோடியாக ‘கத்தி’, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஜாபர்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. கோவில்களில் இருவரும் ஜோடியாக சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல் விவகாரம் பகிரங்கமானது. ஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறார்கள். 

இந்த நிலையில்தான் சமந்தா தற்போது சித்தார்த் வீட்டில் குடியேறியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதுவரை சமந்தா நடிக்கும் படங்களின் கால்ஷீட் விவகாரங்களை அவரது குடும்பத்தினர் கவனித்து வந்தனர். தற்போது அது சித்தார்த் குடும்பத்தார் கைக்கு மாறி உள்ளதாம். 

சித்தார்த்தின் தந்தை சமந்தாவின் கால்ஷீட்களை கவனிப்பதாக செய்திகள் வந்துள்ளது. புதுபட ஒப்பந்தங்கள் குறித்தும் அவரிடம்தான் பேசுகிறார்களாம். 

No comments:

Powered by Blogger.