புலம்பும் இயக்குநர்!
ஆயிரம் யானைகளை காக்கும் இயக்குனர் இயக்கும் தல படத்தில் தான்தான் ஹீரோயின் என்கிற கனவுடன் இருந்தாராம் மூணுஷா. ஆனால் ஆறடி உயர நடிகைதான்னு முடிவானதும் இயக்குனருடன் பேசுவதையே நிறுத்தி விட்டாராம் நடிகை. நடிகையை சமாதானப்படுத்தும் இயக்குனரின் எந்த முயற்சியும் வெற்றி பெற வில்லையாம். படத்தில் வரும் இன்னொரு முக்கிய கேரக்டரை கொஞ்சம் அதிகப்படுத்தி அதில் மூணுஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர். "நடிகைங்களோட பழகினா இதுதான் பிரச்சினை"ன்னு பிரண்டுங்ககிட்ட புலம்பிக்கிட்டிருக்காராம் இயக்குனர்.

No comments: