Header Ads

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை முகாம்களில் தங்க வைக்க அரசு தடை

ராமேஸ்வரம்: இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை முடிவுக்கு வந்த பிறகும், அங்குள்ள தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் தமிழர்களை ராணுவத்தினர் அழைத்து சென்று கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. ராணுவத்துக்கு பயந்து தமிழர்கள் பலர், படகுகளில் தமிழகத்துக்கு வரத் தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இலங்கை தலைமன்னாரில் இருந்து முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த தவேந்திரன், கணேஷ் சுதாகரன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தயாபர ராஜ் ஆகியோர் மனைவி, குழந்தைகள் என 10 பேர் 2 படகில் தனுஷ்கோடி வந்து இறங்கினர். அவர்களை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் தனுஷ்கோடி போலீசார் கைது செய்தனர். 

நேற்று இரவு ராமேஸ்வரம் மாஜிஸ்திரேட் சரவணக்குமார் முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்தினர். அவர் களை வரும் 19ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கைதான 2 சிறுவர்கள் நிலக்ஷனா (9), விதுரன் (7) மற்றும் 3 குழந்தைகள் உள்பட 10 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த இறுதிக்கட்ட சண்டைக்கு பின் தமிழர்கள் வாழும் பகுதியில் இலங்கை அரசு மறுசீரமைப்பு பணிகளை தொடங்கியது. அதனால் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை அகதிகளாக பதிவு செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இங்குள்ள முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள தமிழர்கள், இலங்கை செல்வதற்கும் தேவையான அனுமதியை தமிழக அரசு செய்து வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், Ô அகதிகளாக வருபவர்களை பாஸ்போர்ட் சட்டப்படி கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 3 மாதம் சிறையில் அடைக்கப்படுவர். அதன்பிறகு கலெக்டர் பரிந்துரையின் பேரில் அவர்கள் முகாம்களில் தங்க வைக்க வழி உள்ளதுÕ என்றனர்.

No comments:

Powered by Blogger.