Header Ads

கவர்ச்சி காட்டுவது தொடர்பான விவாதம் : டிவி நிகழ்ச்சியில் கட்டிபுரண்டு சண்டைபோட்ட நடிகைகள்

பாலிவுட் நடிகைகளான சோனாலிரவுத்  மற்றும் சோயா அர்பாஸ் ஆகிய இருவரும் கபில்ஷர்மாவின் காமெடி நைட் வித் கபில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள் தொலைக்காட்சி அரங்கத்திற்கு வந்திருந்தனர். இருவரிடமும் மாறி மாறி கபில்ஷர்மா பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது, கவர்ச்சி காட்டுவது குறித்து பேச்சு வந்தது.

அதில் சோனாலி தெரிவித்த ஒரு கருத்துக்கு நடிகை ஜோயா அர்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சோனாலி திடீரென ஜோயாவின் கன்னத்தில் அறைந்தார். பின்னர் இருவரும் மாறி மாறி ஒருவரை அடித்துக்கொண்டு ஆக்ரோஷத்துடன் கட்டிப்பிடித்து உருண்டு சண்டை போட்டனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த கேமராமேன், மற்றும் இயக்குனர் ஆகியோர்கள் கஷ்டப்பட்டு சண்டையை விலக்கிவிட்டனர்.

நடிகை சோனாலி அறிமுகமான தி எக்ஸ்போஸ்  படத்தில் அவர் வெள்ளை நிற உடையில் ஜாக்கெட் போடாமல் படுகிளாமராக நடித்திருப்பார். அதைப்பற்றிய பேச்சு வந்தபோதுதான் இந்த சண்டை வந்ததாக கூறப்படுகிறது

No comments:

Powered by Blogger.