நடிகைக்கு வலுக்கட்டாயமாக பிரியாணி ஊட்டிய நடிகர்!
தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு தனது கையாலேயே பிரியாணி பரிமாறுவதில் வல்லவர் ஆர்யமானவர். இவர் தற்போதுள்ள முன்னணி நடிகைகளுக்கெல்லாம் பிரியாணி கொடுத்து அசத்தியுள்ளார். ஆனால், இவருடன் தற்போது ஜோடி சேர்ந்திருக்கும் வாரிசு நடிகை இவருடைய பிரியாணி விருந்தில் கலந்து கொள்ளாமல் தப்பித்து வந்துள்ளார். ஆனாலும், இவரை நடிகர் விட்டபாடில்லையாம். படப்பிடிப்பின் போது ஒருநாள் மதியம் நடிகையை வலுக்கட்டாயமாக தன்னுடைய காரில் ஏற்றி நேராக பிரியாணி கடைக்கு சென்று அவருக்கு மணக்க மணக்க விருந்து கொடுத்தாராம். அதோடு விட்டுவைக்காமல் நடிகையின் தாய்க்குலமான முன்னாள் இரண்டெழுத்து நடிகைக்கும் பிரியாணி பார்சல் கொடுத்துவிட்டாராம் நடிகர். இப்போது, நடிகை மட்டுமல்லாது நடிகையின் தாய்க்குலத்தின் மனதிலும் அழுத்தமாக பதிந்து விட்டாராம் நடிகர்.

No comments: