லிங்கா படத்தில் நடித்தது இனிமையான அனுபவம்: சோனாக்சி சின்ஹா
லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார் சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் பிரபல நடிகை ஆவார். சத்ருகன் சின்ஹாவின் மகள். டபாங் இந்தி படத்தில் சல்மான்கான் ஜோடியாக அறிமுகமானார். பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்தார். பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார் படத்திலும் நடித்தார். தற்போது லிங்கா படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
தற்போது சோனாக்சி சின்ஹா லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்து ரஜினியுடன் அனுஷ்கா நடிக்கும் காட்சிகள் படமாக உள்ளன.
இதில் நடித்தது குறித்து சோனாக்சி சின்ஹா தனது டுவிட்டரில் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். லிங்காவில் நடித்தது இனிமையான அனுபவமாக இருந்தது. திறமையான குழுவினருடன் பணியாற்றினேன். இந்த படத்தில் முதல் கட்டமாக முடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

No comments: