Header Ads

முத்த வியாபாரம்..கதைக்கு தேவைப்பட்டால் எந்த நடிகருடனும் முத்தக்காட்சியில் நடிப்பேன்..

கதைக்கு தேவைப்பட்டால் எந்த நடிகருடனும் முத்தக்காட்சியில் நடிப்பேன் என்ற ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்ட லட்சுமிகரமான மேனன் நடிகைக்கு இப்போது ஒரு சிக்கல். அவரைத் தேடி வரும் கதைகளில் எல்லாம் ஒரு லிப் லாக் முத்தக்காட்சி கண்டிப்பாக இருக்கிறதாம். கேட்டால் "கதைக்கு இது ரொம்ப முக்கியம் மேடம்" என்கிறார்களாம். என்னடா இது வம்பாபோச்சு, இதை எப்படி சமாளிக்கிறதுன்னு தாய்குலம் மூணு நாளா னியா யோசிச்சு ஒரு முடிவை அறிவிச்சிருக்காராம். சம்பளத்துடன் ஒரு முத்தக்காட்சிக்கு பத்து லகரம் எக்ஸ்ட்ராவா கொடுத்திடணும். இரண்டு முத்தக்சாட்சின்னா இருபது லகரம். எத்தனை காட்சின்னாலும் வச்சிக்குங்க. மீட்டரை சரியா கட்டிடுங்க என்கிறாராம். முத்தம் முக்கியமா, மொத்த பணம் முக்கியமான்னு குழம்பிப்போய் திரும்புறாங்களாம் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும். மொத்த வியாபாரம் கேள்விப்பட்டிருக்கோம் இதென்ன முத்த வியாபாரம்னு முணுமுணுக்கிறாங்களாம்.

No comments:

Powered by Blogger.