அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் சுந்தர்.சி
அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘சத்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், கௌதம் மேனன் படத்திற்கு பிறகு அஜீத், இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, சுந்தர்.சி. மனைவியும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அஜீத்-சுந்தர்.சி விரைவில் இணையவிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
கௌதம் மேனன் படத்திற்கு முன்பே சுந்தர்.சி இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சுந்தர்.சி தற்போது ‘அரண்மனை’ படத்தில் பிசியாக இருப்பதால் அஜீத்தை வைத்து இயக்கமுடியாமல் போனது. எனவே, கௌதம் மேனன் படத்தை முடித்துவிட்டு சுந்தர்.சியுடன் அஜீத் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, சுந்தர்.சி. இயக்கத்தில் அஜீத் ‘உன்னைத் தேடி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: