Header Ads

நடிகை கங்கானா ரனாவத்தின் கவர்ச்சி போஸ் பெண்கள் அமைப்பு கண்டனம்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் பத்திரிகை ஒன்றுக்கு கவர்ச்சியான உடையுடன் மது குடிப்பது போன்றும் சிகரெட் புகைப்பது போன்றும் கொடுத்துள்ள போஸ் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது.
தமிழில் ஜெயம் ரவியுடன்  தாம் தூம் என்ற படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் இவர் சமீபத்தில் கோ இந்தியா என்ற பேஷன் பத்திரிகைக்காக மிகவும் கவர்ச்சியான போஸ்கள் கொடுத்துள்ளார். உள்ளாடைகள் மட்டுமே அணிந்து சிகரெட் புகைப்பது போன்றும், மது குடிப்பது போன்றும் கங்கனா போஸ்கள் கொடுத்துள்ளளார். இதற்கு மும்பையில் உள்ள பெண்கள் அமைப்பு ஒன்று கங்கனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பணத்திற்காக கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் நடிகைகள் போஸ் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இது தொடர்ந்தால் நீதிமன்ற நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபடக்கூடிய நிலை ஏற்படும் என அவர் கங்கனாவுக்கு மட்டுமின்றி நடிகைகள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களை மோகப்பொருளாக பயன்படுத்துவதை ஊடகங்களும் நிறுத்த வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Powered by Blogger.