சகாபதம் படத்தில் விஜயகாந்த் மகனுக்கு ஜோடி ஸ்ரீதேவி மகள் ஜான்வி இல்லை மும்பை அழகி
கடந்த இரண்டு மாதங்களாக பாராளுமன்ற தேர்தலில் பிசியாக இருந்த நடிகர் விஜயகாந்த், தற்போது தனது மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் "சகாப்தம்" திரைப்படத்தை தொடங்குவதில் பிசியாக உள்ளார். பூஜை போடப்பட்ட தனது மகன் படத்தின் படப்பிடிப்பு குறித்த ஆலோசனையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
முதலில் தனது மகன் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து இயக்குனருடன் ஆலோசனை செய்து வருகிறார். இயக்குனர் சந்தோஷ் குமார் ராஜன் ஆலோசனைப்படி ஸ்ரீதேவி மகள் ஜான்வியை சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவி இதற்கு உடன்படவில்லை. தனது மகளின் படிப்பு இன்னும் முடியவில்லை என்றும், தற்போது அவர் எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.
பின்னர் தற்போது புனே மாடல் அழகி ஒருவர் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புனே அழகியின் பெயர் மற்றும் புகைப்படங்கள் எதுவும் வெளிவராமல் ரகசியம் காத்திட விஜயகாந்த், இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

No comments: