Header Ads

சச்சின் டெண்டுல்கரை தோற்கடித்த ரஜினிகாந்த்!

இதுவரை பேஸ்புக், டுவிட்டர் பக்கம் வராமல் இருந்த ரஜினியும் நேற்று முன்தினம் டுவிட்டர் கணக்கு தொடங்கி விட்டார் அல்லவா? அதையடுத்து, கணக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஜினியை 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்களாம். அதோடு, ஒவ்வொரு நிமிடமும் 1000 பேர் தொடர்கிறார்களாம். இதில் ரசிகர்கள் மட்டுமின்றி, பல அரசியல் பிரமுகர்களும் இருக்கிறார்களாம்.

அந்த வகையில், உலக அளவில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையே, ரஜினி பின்தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது சச்சின் டுவிட்டருக்கு வந்து இரண்டு நாட்களில்தான் அவரை 2 லட்சம் பேர் பின்தொடர்ந்தார்களாம. ஆனால் ரஜினியையோ ஒரேநாளில் 2 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.

ஆக. இதுவரை சச்சினின் டுவிட்டர் சாதனையை முறியடிக்க யாருமே இல்லாத நிலையில், நம்ம ரஜினி வந்து அவரை வீழ்த்தி, முதலிடத்தில் இருந்த அவரை இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளிவிட்டார். ஆக, ரஜினியிடம் தோற்று விட்டார் சச்சின் டெண்டுல்கர்.

No comments:

Powered by Blogger.