அஜீத் படத்தில் இன்னொரு நாயகியாக த்ரிஷா!
கெளதம்மேனன் இயக்கும் தனது 55-வது படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அஜீத். சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் போலீஸ் அதிகாரியாக தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த அஜீத்தின் ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். அவர்கள் இணைந்து நடித்த பெருவாரியான காட்சிகளை முதல்கட்ட படப்பிடிப்பில் நடத்தி முடித்து விட்டார் கெளதம்.
இதையடுத்து, இன்னும் சில நாட்களில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. அப்போது இளவட்ட அஜீத்தாக இன்னொரு கெட்டப்பில் அவர் நடிக்கறார். ஆனால் அந்த அஜீத்துக்கு ஜோடி உள்ளதா? இல்லையா? என்கிற கேள்விகள் எழுந்து கொண்டிருந்த நிலையில் இப்போது த்ரிஷா இன்னொரு அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அஜீத் நடித்த ஜி, கிரீடம், மங்காத்தா ஆகிய மூன்று படங்களில் அவருடன் டூயட் பாடியவர் த்ரிஷா. அதோடு, கெளதம்மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா மெகா ஹிட் படத்தில் நடித்து அவரது செண்டிமென்ட் நாயகி பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார். அதனால் இப்போது மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கும் த்ரிஷா, அனுஷ்காவை விடவும் பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாக களமிறங்குகிறாராம்.

No comments: