அமலாபால், டைரக்டர் விஜய் திருமண ஏற்பாடுகள்: நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ்..
அமலாபால்- டைரக்டர் விஜய் திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அடுத்த மாதம் (ஜுன்) 12-ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
முன்னதாக 7-ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து. அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இதனால் திருமணத்தை இந்து முறைப்படியும், நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறைப்படியும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண அழைப்பிதழ்கள் தற்போது தயாராகியுள்ளது. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் நண்பர்களுக்கு இருவரும் திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து வருகின்றனர்.
இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. காதலை பகிரங்கமாக அறிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் காதலை ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து திருமணம் முடிவானது.
அமலாபால் ஏற்கனவே மைனா, வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி, மலையாளத்தில் லைலா ஓ லைலா மற்றும் மிலி படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு முன்பு இப்படங்களை முடித்து கொடுத்து விட திட்டமிட்டு உள்ளார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பார் என தெரிகிறது.

No comments: