Header Ads

இளவட்டமாக மாறிக்கொண்டிருக்கும் அஜீத்!

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் சத்யதேவ் படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சில நாட்களாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலைப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஆனால், சாதாரண நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள், அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களின் படப்பிடிப்பு என்றால் விட்டு விடுவார்களா? கூட்டம் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கி விட்டனர். அதனால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட இப்போது செட் அமைத்து அதற்குள் மொத்த படப்பிடிப்பையும் நடத்தும் வேலைகளில் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், முதல்கட்டமாக தனது வழக்கமான சால்ட அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்த அஜீத், அடுத்து அதே படத்தில் நடிக்கும் இன்னொரு இளவட்ட கெட்டப்பில் நடிக்கப்போகிறாராம். அதனால், செட் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த இடைவெளியில் தனது யூத் கெட்டப் சம்பந்தமான ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறார்.

மேலும் வருகிற 14-ந்தேதி சத்யதேவ் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கயிருப்பதாக தெரிவித்திருக்கும் கெளதம்மேனன், இந்த படத்தைப் பொறுத்தவரை வெளிநாடுகளுக்கு செல்லப்போவதில்லையாம். வசன காட்சிகள் மட்டுமின்றி, சண்டை, பாடல் காட்சிகள் என அனைத்தையும் சென்னையிலேயே செட் போட்டு முடித்து விடவும் திட்டமிட்டுள்ளாராம்.

No comments:

Powered by Blogger.