Header Ads

கோவை மசாஜ் சென்டர்களில் ரகசிய அறையில் விபசாரம்

கோவையில் மசாஜ் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை சென்டர்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு புகார்கள் வந்தன. உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கினர்.

அப்போது கோவை சரவணம்பட்டியை அடுத்த சின்னவேடம்பட்டியில் செயல்படும் ஆரோக்கியா ஆயுர்வேதிக் கேர் என்னும் மசாஜ் சென்டருக்கு அடிக்கடி கல்லூரி மாணவர்கள் வந்து செல்வது தெரியவந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஒரு வாலிபரை வாடிக்கையாளர் போல அனுப்பியதில் அங்கு மசாஜ் மற்றும் விபசாரம் நடப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீசார் மசாஜ் சென்டருக்குள் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த கேரள அழகிகள் 2 பேரை மீட்டனர்.

மசாஜ் சென்டரை நடத்தி வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த மானு என்பவரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் தங்கள் வேட்டையை நேற்றும் தொடர்ந்தனர். அப்போது சரவணம்பட்டி சத்தி ரோட்டில் இயங்கி வரும் ‘ஜில் ஜில் மசாஜ் சென்டர்’ மீது சந்தேகம் எழுந்தது. பலமணி நேரம் தீவிரமாக கண்காணித்த பிறகு உள்ளே நுழைந்தனர்.

அங்குள்ள ரகசிய அறையில் ஒரு வாலிபருக்கு 20 வயது மதிக்கத்தக்க நாகலாந்து அழகி அரைகுறை ஆடையில் மசாஜ் செய்து கொண்டிருந்தார். அந்த வாலிபர் உடலில் ஆடை எதுவும் இல்லை. போலீசாரைக் கண்டதும் அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். அவரை அப்படியே கொத்தாக பிடித்து வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் ஒழுக்கமாக இருக்கும் வழியைப்பார் என்று எச்சரித்து அனுப்பினர். நாகலாந்து அழகியை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டரில் இருந்த சத்தியநாதன்(29) என்பவரை கைது செய்தனர். இவர் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர்.

மசாஜ் சென்டரை நடத்தி வந்த சூரியபிரகாஷ் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவர் சேலத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மசாஜ் சென்டருக்கு வருபவர்களிடம் மசாஜ் செய்ய ரூ.2 ஆயிரம் கட்டணமாகவும், மசாஜ் செய்யும் அழகியுடன் உல்லாசமாக இருக்க ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆயுர்வேத சென்டர் மற்றும் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.