டிவிட்டரில் இணைந்தார் நடிகர் ரஜினிகாந்த்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைத்தளமான டிவிட்டரில் நேற்று இணைந்தார். இதை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் ரஜினிகாந்த் பெயரில் ஏராளமான பக்கங்கள் உள்ளன. இதை அவரது ரசிகர்கள் ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் ரஜினி எந்த சமூக வலைத்தளத்திலும் சேராமல் இருந்தார். பிரபலங்கள் அனைவரும் டிவிட்டரில் இணைந்து தங்கள் கருத்துக்களைச் சொல்லி வருவதால், நடிகர் ரஜினிகாந்த்தும் நேற்று அதில் இணைந்தார்.
அவரது டிவிட்டர் ஐடி: @superstarrajini என்பதாகும். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள வீடியோ பேட்டியில், ‘டிவிட்டரில் இணைகிறேன். சமூக வலைத்தளம் மூலமாக என் ரசிகர்களுடன் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவரது முதல் டிவீட்டில், ‘இறைவனுக்கு நன்றி. அனைவருக்கும் வணக்கம். இந்த டிஜிட்டர் பயணம் உற்சாகமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் டிவிட்டரில் இணைந்த சில நிமிடங்களிலேயே 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவர் பக்கத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: