Header Ads

பாலியல் தொந்தரவு செய்த தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மகள்

மேற்கு டெல்லி பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண் இவரது தாய் கடந்த 3 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதை தொடர்ந்து இளம்பெண் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

நேற்று தந்தையை தனது நண்பர்களுடன் கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் கூறியதாவது. கடந்த 3 வருடங்களுக்கு முன் எனது தாய் இறந்து விட்டார் அதில் இருந்து எனது தந்தை என்னை பாலியல் தொந்தரவு செய்து வந்தார். இதனால் தனது 2 நண்பர்கள் உதவியுடன் தந்தையை கொலை செய்ததாக கூறினார் இதை தொடர்ந்து போலீசார் 22 மற்றும் 23 வயது உடைய 2 வாலிபர்களை கைது செய்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 20 ந்தேதி தந்தையை கொலை செய்து  மேற்கு டெல்லியில் உள்ள காய்லா கால்வாயில் வீசி உள்ளனர். போலீசார் உடலை கடந்த ஏப்ரல் 30 ந்தேதி மீட்டு உள்ளனர்

No comments:

Powered by Blogger.