இதப்படிங்க முதல்ல....
சஸ்பென்ஸ் வைக்கும் கவுதம் மேனன்!
அஜித்தின், 55வது படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு வேடம் என்று கூறியவர், முந்தைய படங்களில் நடித்த நரைமுடி ஹேர் ஸ்டைல் இந்த படத்தில் இருக்காது என்று, முன்பு சொல்லி வந்தார். ஆனால், தற்போது அதே, 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்புடன் தான் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். இதுபற்றி கவுதம் மேனனைக் கேட்டால், 'இரண்டு கெட்டப்பில் இதுவும் ஒன்று; இதன்பின் தான் அந்த, 'யூத்' கெட்டப்பை படமாக்க உள்ளேன்...' என்று கூறியவர், 'இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கவிருப்பதால், ஒரு மாற்றம் செய்திருக்கிறேன். அதாவது, ஒரு வேடத்தில் இரண்டு விதமாக வருகிறாரா இல்லை, இரண்டு வேடங்களிலேயே நடிக்கிறாரா என்பதில், ஒரு சின்ன டுவிஸ்ட் வைத்திருக்கிறேன். அதை படம் திரைக்கு வரும் வரை, சஸ்பென்சாக வைக்கப் போகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா.
சமந்தாவை பாதித்த குயின்!
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, இந்தியில் வெளியாகும் படங்களை தவறாமல் பார்த்து விடுகிறார். அப்படி, கங்கனா ரணாவத் நடித்த, குயின் என்ற படம் பார்த்த போது, அப்படம் அவரை வெகுவாக பாதித்து விட்டது. அதனால், அப்படத்தின் தெலுங்கு ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ள சமந்தா, அதில், கங்கனா நடித்த வேடத்தில், தான் நடிக்க முடிவு செய்துள்ளார். படத்தை தயாரிக்க, சரியான படாதிபதி கிடைக்காத பட்சத்தில், அப்படத்தை, தானே தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். தன் காரியம் என்றால், தன் சீலையும் பதைக்கும்!
— எலீசா
நடிகை அலியா பட்டை துரத்தும் தனுஷ்!
ராஞ்ஜனா படத்தில் நடிப்பதற்காக, பாலிவுட்டுக்கு சென்ற இடத்தில், அங்குள்ள அலியா பட்டின் அழகுக்கும், திறமைக்கும் அடிமையாகி விட்டார் தனுஷ். அதனால், அவருடன் ஒரு படத்திலேனும், டூயட் பாடி விட வேண்டுமென்று துடிப்பவர், வெற்றி மாறன் இயக்கத்தில், தான் நடிக்கவிருக்கும் படத்திற்கு அலியா பட்டை, 'புக்' செய்ய, முட்டிக் மோதிக் கொண்டிருக்கிறார். ஆனால், விஜய்யின் கத்தி மற்றும் அஜித்தின் புதிய படங்களில் நடிக்கவே மறுத்து விட்ட அலியா பட், தனுஷின் வேண்டுகோளை தொடர்ந்து, அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார். இருப்பினும், எறும்பு ஊற கல்லும் தேயும் என்று, தொடர்ந்து அம்மணியிடம் முயற்சி செய்து வருகிறார்.

No comments: