Header Ads

ஆந்திராவில் தோல்வியடைந்த விஜயசேதுபதி படங்கள்!

தமிழில் விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்தன. இதனால் கோலிவுட்டில் அவரது மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்தது. அதோடு, அவர் நடித்த படங்களின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டன.

அந்த வகையில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா ஆகிய படங்களின் தெலுங்கு ரைட்ஸ் எதிர்பார்க்காத அளவுக்கு வியாபாரம் ஆனது. அதுமட்டுமின்றி, அந்த படங்களை தமிழை விடவும் பெரிய அளவில் செலவு பண்ணி தயாரித்தார்களாம். ஆனால், தமிழில் வெற்றி பெற்ற அந்த இரண்டு படங்களுமே தெலுங்கில் ஓடவில்லை.

இதனால், விஜயசேதுபதி அதற்கடுத்த நடித்த படங்களில் ரைட்ஸை வாங்குவதற்கு இப்போது ஆளில்லை. அதுமட்டுமின்றி, தமிழில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தெலுங்கிலும் ஒரு கால் பதித்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த விஜயசேதுபதியும் இப்போது ஜர்க் அடித்து விட்டார். தமிழ்நாட்டு ரசிகர்களுக்குத்தான் தான் செலக்ட் பண்ணி நடிக்கிற கதைகள் பிடிக்கிறது. அதனால், அகல கால் வைக்க ஆசைப்பட வேண்டாம் என்று தெலுங்கு சினிமா ஆசையை மூட்டை கட்டி விட்டார் விஜயசேதுபதி.

No comments:

Powered by Blogger.