ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற 40 நாட்களே உள்ள சூழ்நிலையில், அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 900 கி.மீட்டர் தொலைவில் உள்ள வோல்கோக்ராட் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த நிலையில், இன்று அங்கு மீண்டும் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
தொடர் பேருந்து ஒன்றில் ஏறிய தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில் பஸ் பயங்கரமாக சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த பயணிகளில் பலர் உடல் சிதறி பலியாகினர். 10 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
No comments: