அஜீத்தின் ‘வீரம்’ கன்னடத்தில் ரீமேக் ஆகிறது
ஆரம்பம்’ படத்திற்கு பிறகு அஜீத் நடித்து முடித்துள்ள படம் ‘வீரம்’ இப்படத்தை சிறுத்தை ‘சிவா’ இயக்கியுள்ளார். அஜீத்துடன் தமன்னா, விதார்த், பாலா, ஆதி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக இப்படம் வரும் ஜனவரி 10-ந் தேதி வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்ய உள்ளனர். இதுகுறித்து இப்படத்தின் கன்னட ரீமேக் உரிமையை பெற்றுள்ள கன்னட தயாரிப்பாளர் கே.மஞ்சு கூறும்போது, அஜீத் நடித்துள்ள ‘வீரம்’ படத்தின் கன்னட ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறேன். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்ய உள்ளோம் என்று கூறினார்.
No comments: