சபரி மலைக்கு நடைபயணம் செல்லும் 94 வயது சினிமா கலைஞர்: உலக அமைதிக்காக செல்வதாக பேட்டி
சபரி மலை கோவிலுக்கு நடை பயணமாக செல்லும் 94 வயது சினிமா கலைஞர் உலக அமைதிக்காக செல்வதாக தெரிவித்தார்.
சென்னை வட பழனியைச் சேர்ந்தவர் ஸ்ரீ பிச்சைமணி சுவாமிகள். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, சரோஜா தேவி, ஜெயலலிதா, நம்பியார் உள்பட நடிகர், நடிகைகளுக்கு ஒப்பனை பணியாற்றி உள்ளார். சேலம் மார்டன் தியேட்டரில் தலைமை ஒப்பனை கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.
இவர் கடந்த 39 ஆண்டுகளாக சென்னையிலிருந்து சபரி மலைக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறார். இவர் தற்போது 94 வயதான ஸ்ரீ பிச்சைமணி சுவாமிகள் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அங்கு சுவாமிகளை ராமநாத குருசாமி மற்றும் செட்டிக்குளம் மருதமுத்து ஆகியோர் அவரை வரவேற்றனர்.
பின்னர் செட்டிக்குளத்தில் நடந்த மண்டல பூஜையில் ஸ்ரீ பிச்சைமணி சுவாமிகள் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு அருளாசி வழங்கினார்.
நடைபயணம் புறப்படுவதற்கு முன்பு நிருபர்களிடம் பேசிய ஸ்ரீ பிச்சைமணி சுவாமிகள் உலகில் அனைவரும் வறுமையில் இருந்து மீள வேண்டும். உலகத்தில் அமைதி நிலவ வேண்டும். சாதி, மத பேதமின்றி வாழவும், ஏற்ற தாழ்வுகளை கலைய வேண்டும் என்பதற்காக பாதயாத்திரை சென்று வருகிறேன் என்று கூறினார்.
ஸ்ரீ பிச்சைமணி சுவாமிகள் தலைமையில் ராமநாத சுவாமி, மனோகரன், குலசேகர ஆழ்வார், தங்கராஜ், செல்வராஜ், புஷ்பராஜ், விநாயகம், மணி, அருண்குமார், தேனூர் கிருஷ்ணன், சிவா, கண்ணையன், மோகன், மாதவன், வேல்முருகன், ஜோதிவேல், அஜிஸ்குமார், ஆகியோர் நடைபயணம் சென்றனர். இந்த பயணக்குழுவினர் வருகிற 14ம் தேதி சபரிமலைக்கு சேர்வார்கள்.
No comments: