Header Ads

மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் ரம்பா

ஒரு காலத்தில் ரசிகர்களை தன் அழகாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ரம்பா. தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த சில படங்கள் சரிவர ஓடாததால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி ஒரு குழந்தைக்கும் தாயும் ஆகிவிட்டார். 

திருமணத்திற்கு பிறகு இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டும் இவர் மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முன்வந்துள்ளார். தற்போது புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ரம்பா மீண்டும் நடிக்க வந்துள்ளதை அறிந்த பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அவரை அணுகி உள்ளனர். நல்ல கதை, நல்ல சம்பளம் கொடுத்தால் நடிக்க ரெடி என ரம்பா கூறி வருகிறாராம். வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததும் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.