இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1.5 கோடி தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது
இலங்கையில் இருந்து இன்று சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று இலங்கையில் இருந்து வந்த விமானங்கள் மற்றும் அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடுமையாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது, இலங்கையில் இருந்து வெவ்வேறு விமானங்களில் வந்த 4 பயணிகள் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இந்தியர்கள்.
அவர்களிடம் இருந்து 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடி இருக்கும். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments: