தோழியின் காதலால் தன் வாழ்வைத் தொலைத்த இளம்பெண்ணின் சோகக்கதை.
தமிழகத்தில் 10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து 20 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கனணி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது தோழியுடன் டிசம்பர் 24ம் திகதி இரவு காரைக்காலுக்கு வந்துள்ளார்.
தோழி தனது 17 வயது காதலனை பார்ப்பதற்கு வருகையில், அவருக்கு துணையாகவ பாதிக்கப்பட்ட பெண் வந்துள்ளார். பின்பு காதலன் தனது நண்பர் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று தனியே இருந்துள்ளார்.
இதனை அவதானித்த ஒரு கும்பல் அப்பெண்ணை கடத்திக் கொண்டுபோய் பலாத்காரம் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட தனது தோழியை எவ்வளவோ தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதால் நீண்ட போராட்டத்திற்கு தோழியைக் கண்டுபிடித்து 3 பேரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கும் திடீரென வந்த கும்பல் ஒன்று தோழியையும், அவனது காதலனையும் அடித்து விரட்டிவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மறுபடியும் அங்கிருந்து கடத்திச்சென்று பலாத்காரம் செய்துள்ளது.
பின்பு உள்ளூர் நண்பர்களின் உதவியால் அப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளார். பின்பு ஊர் மக்கள் இச்சம்பவத்தை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அந்த கும்பலில் இருந்த 3 பேரை மட்டும் பிடித்துள்ளனர். அவர்களின் விசாரித்ததில் மொத்தம் இந்த கும்பலில் 13 பேர் இருப்பதாகவும் அதில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் நண்பர்கள் என்றும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments: