சிம்பு- ஹன்சிகா பிரிவு: சிம்ரன் குஷி
சிம்ரன். இந்த வயதில் உனக்கு சினிமா கேரியர்தான் முக்கியம். காதலில் விழாதே. அதிலிருந்து வெளியே வா என ஹன்சிகாவுக்கு அறிவுறுத்தினார் சிம்ரன். ஹன்சிகா மீது சிம்ரனுக்கோ மற்ற நடிகைகளுக்கோ அக்கறை கிடையாது.
ஆனால் சீனியர் நடிகைகள் அட்வைஸ¢ செய்வதால் இதில் வேறு ஏதோ காரணம¢ இருப்பதாக கோலிவுட்டார் நம்பினார்கள். இந்நிலையில் சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துள்ளது. இதுவரை ஹன்சிகாவை பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லாமல் இருந்த சிம்ரன், இப்போது அவரை பாராட்டி தள்ளியுள்ளார். இப்போதுள்ள நடிகைகளில் ஹன்சிகாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
அவரது எதிர்காலத்தை புரிந்து செயல்படுகிறார். அவரிடம் அழகும் கவர்ச்சியும் சேர்ந்தே இருக்கிறது. டான்சும் நன்றாக ஆடுகிறார். எனது இடத்தை அவர் பிடிப்பார் என நம்புகிறேன் என ஓவராக ஐஸ் வைத்திருக்கிறார் சிம்ரன். சிம்புவை ஹன்சிகா பிரிந்ததாலேயே அவரை இப்படி சிம்ரன் பாராட்டுவதாக கூறப்படுகிறது.
No comments: