மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் சினிமா தயாரிப்பாளர் உட்பட 2 பேர் சிக்கினர்
சென்னை : மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜிக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்படி பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை முழுவதும் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் கீழ்கட்டளை, மேடவாக்கம் மெயின்ரோடு, நேச்சுரல் கிரீன் யுனிசெக்ஸ் ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது.இதையடுத்து அதன் உரிமையளார் பெருங்களத்தூரை சேர்ந்த ஹேமலதா (எ) ஆயிஷா(38) மற்றும் அவரது கூட்டாளி பாளையங்கோட்டையை சேர்ந்த பாரதி கண்ணன் (எ) கனகேந்திரன்(36) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை மீட்டனர்.
விசாரணையில் ஹேமலதா (எ) ஆயிஷா என்பவர் பாலியல் வழக்குகளில் 2012ல் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் என்றும் இவரது கூட்டாளி பாரதி கண்ணன் மீது 10க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் உள்ளது, 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்றும், கனகேந்திரன் என்ற தனது பெயரை 2002ல் நினைவே என்ற சினிமாவை தயாரித்துள்ளார், அப்போது சினிமாவுக்காக பாரதிகண்ணன் என பெயர் மாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்தியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும், வெளிமாநிலங்களை சேர்ந்த 10 இளம்பெண்கள் மீட்கப்பட்ட தாகவும் போலீசார் தெரிவித்தனர்.
No comments: