கிளாமருக்கு ஓ.கே சொன்னதால் தனுஷுக்கு ஜோடியான லட்சுமி மேனன்
கும்கி', 'சுந்தரபாண்டியன்', 'குட்டிப்புலி', 'பாண்டியநாடு' என நான்கு படங்களிலும் ஹோம்லியாக நடித்தார் லட்சுமி மேனன்.
'பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருக்கிறீர்கள். தொடர்ந்து இப்படியே நடியுங்கள்' என்று பலரும் சொன்னதால், பூரித்துப் போனார்.
ஆனால், சினிமாவில் இருப்பவர்கள் சொன்ன ஆலோசனை வேறு மாதிரி இருந்ததாம்.
'நீண்ட வருடங்கள் சினிமாவில் நீடிக்க வேண்டுமானால், கொஞ்சமாவது கவர்ச்சி தேவை' என்று சொன்னதை , மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் லட்சுமி மேனன்.
அதனால், ஜிம்மிலேயே பழியாகக் கிடக்கிறார்.இந்தத் தருணத்தில்தான் லட்சுமிக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.
'வேலையில்லா பட்டதாரி' படத்துக்குப் பிறகு, தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அம்மணிதான் ஹீரோயின். இதில் , ஹோம்லியில் இருந்து மாறி கொஞ்சம் கிளாமராக நடிக்க ஓ.கே சொல்லிவிட்டாராம்.
இந்த செய்தி கேட்டு அமலாபால்தான் அதிர்ந்து போனாராம். 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்து முடித்த கையோடு, தனுஷுடன் அடுத்த படத்திலும் நடித்துவிட வேண்டும் என்று கணக்கு போட்டாராம் , அமலா.
அது வெறும் கனவாகிப் போனதால் அமலா ரொம்பவே அப்செட்டாம்.
No comments: