தயாரிப்பாளரை நோகடித்த நடிகை!
உலக நாயகனின் படத்தை தயாரிக்கும் சண்டக்கோழி இயக்குனர் இப்படத்தில் நடிக்க முதலில் காஜலான ஹீரோயினைத்தான் புக் செய்திருந்தாராம். ஆனால், அவர் முதலில் கேட்ட சம்பளம் இவருக்கு ஒத்து வராமல் போகவே அவரை விலக்கிவிட்டு வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய முன்வந்தாராம். ஆனால், இவர் லிஸ்டில் இருந்த நடிகைகள் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் மீண்டும் காஜலமான நடிகையை ஒப்பந்தம் செய்தாராம்.
இப்போது ரூ.2 கோடி வரை சம்பளம் பேசி அந்த நடிகையை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இதுமட்டுமல்லாமல் போக்குவரத்து செலவு, உடன் வருபவர்களின் செலவையும் தனியாக கவனிக்க வேண்டுமாம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தத் தெரிந்து கொண்ட நடிகையை நம்பி பாழும் கிணற்றில் விழுந்துவிட்டோமோ என எண்ணி அந்த இயக்குனரான தயாரிப்பாளர் நொந்து போய் உள்ளாராம்.
No comments: