துல்கர் - நஸ்ரியா பயணத்திற்கு டாட்டா
52 நாட்களிலேயே ‘வாய் மூடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் பாலஜி மோகன்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பாலாஜி மோகன்.
இப்போது தனது அடுத்த படமான ‘வாய் மூடி பேசவும்’ படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடி போட்டுள்ளார் நஸ்ரியா.
ஒருவழியாக இப்போது வாய் மூடி பேசவும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் பாலாஜி மோகன்.
இந்தப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாலாஜி மோகன். இதன்மூலம் அனிருத் மலையாள சினிமாவில் காலடி எடுத்துவைக்கிறார்.
No comments: