இயக்குனருக்கு கைவிரித்த ஆக்ஷன் ஹீரோக்கள்
ஆக்ஷன் படங்களை இயக்க விரும்பிய வசந்த பாலனுக்கு பிரபல ஹீரோக்கள் கைவிரித்ததால் ஏமாற்றம் அடைந்தார். வெயில், அங்காடி தெரு, அரவான் போன்ற மாறுபட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். கோலிவுட்டில் வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குனர்களைவிட ஆக்ஷன் கதைகளை இயக்குபவர்களுக்குதான் மவுசு. அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்தார் வசந்தபாலன். கார்த்தி உள்ளிட்ட இரண்டு ஹீரோக்களை மனதில் வைத்து பக்கா ஆக்ஷன் கதையை உருவாக்கினார். அதுபற்றி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் கால்ஷீட் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ஆமிர்கான நடித்து வெளியான தூம் 3 படத்தை பார்த்த வசந்தபாலனுக்கு அதில் வரும் ஆக்ஷன் காட்சிகளை கண்டதும் ஏற்கனவே கைநழுவிப்போன ஆக்ஷன் படத்தை இயக்கும் ஆசை வந்திருக்கிறது. இதற்காக ஆக்ஷன் ஸ்கிரிப்ட் தயாரித்து வைத்திருந்தாலும் பொருத்தமான ஹீரோ கிடைக்காததால் தனது ஆசையை ஆறப்போட்டிருக்கிறார். தற்போது சித்தார்த் நடிக்கும் காவியத் தலைவன் என்ற படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன்.
அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட்டை போனிகபூர், லிங்குசாமி ஆகியோரிடம் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவை டெக்னிக்கலாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக அது இருக்கும் என வசந்தபாலன் நம்புகிறார்.
No comments: