கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: நித்யாமேனன்
நித்யாமேனன் ‘நூற்றி என்பது’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘வெப்பம்’ படத்திலும் நடித்தார். தற்போது சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஸ்ரீப்ரியா இயக்கும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சக நடிகைகள் கவர்ச்சிக்கு மாறியுள்ளதால் போட்டியை சமாளிக்க நித்யாமேனனும் புதுப்படமொன்றில் கவர்ச்சியாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. இதனை நித்யா மேனன் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:–
கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்க வேண்டும், டூயட் பாட வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்க கூடாது. அதற்கும் மேல் அவர்களுக்கும் நடிப்புத் திறமை இருக்கிறது.
என்னை பொருத்த வரை நல்ல வேடங்களில் மட்டுமே நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். என்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் இதனை உறுதியாக சொல்லி விடுகிறேன்.
கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். எனது கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.
இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.
No comments: