புதிய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணிக்கு 232 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு...
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி சமீபத்தில் புதிய கருத்து கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் கிடைக்கும்; தேசிய அளவில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பாரதீய ஜனதா கூட்டணிக்கு 212 முதல் 232 இடங்கள் வரை கிடைக்கும். இதில் பாரதீய ஜனதா மட்டும் தனித்து 193 முதல் 213 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 119 முதல் 139 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் மட்டும் தனித்து 94 முதல் 110 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் மிக குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலை உள்ளது.
பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 36 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 29 சதவீத ஓட்டுகளும், கிடைக்கும். இதில் பாரதீய ஜனதா மட்டும் தனித்து 33 சதவீத ஓட்டுகளை பெறும் கூட்டணி கட்சிகளால் 3 சதவீத ஓட்டுகளே கிடைக்கும்.
அதேபோல் காங்கிரஸ் தனித்து 26 சதவீத ஓட்டுக்களை பெறும். கூட்டணி கட்சிகளால் அதற்கு 3 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்.
கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 28.6 சதவீத ஓட்டுகளை பெற்று 206 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பாரதீய ஜனதா 18.8 சதவீத ஓட்டுகள் பெற்று 116 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்த தேர்தலில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். மாநில கட்சிகள் அவரவர் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைபற்றும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மாநில கட்சிகளுக்கு குறைந்த பட்சமாக எத்தனை இடம், அதிகபட்சமாக எத்தனை இடம் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:–
மோடி பிரதமர் ஆவதற்கு உத்தரப்பிரதேசம், பீகார், மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் கடந்த ஜனவரி மாதம் நடத்திய கருத்து கணிப்பில் 36 சதவீத ஆதரவு இருந்தது. தற்போது 2 மாதத்தில் அது 31 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே சமயம் ராகுல் காந்திக்கு ஆதரவு 12 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரித்து உள்ளது. சோனியாவுக்கு ஆதரவு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று உயர் வகுப்பினர் 47 சதவீதம் பேரும், ராகுல்காந்திக்கு 10 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த 6 மாநிலங்களில் 10–ல் ஒரு முஸ்லிம் மட்டுமே மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் மத்தியில் மோடிக்கு 10 சதவீத ஆதர வும், ராகுல் காந்திக்கு 26 சதவீத ஆதரவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: