கத்தாரில் குண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் உள்ளிட்ட 11 பேர் பலி
கத்தார் நாட்டு தலைநகரில் உள்ள துர்கிஷ் உணவகத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 இந்தியர்கள் உள்பட 11 வெளிநாட்டவர்கள் பலியானார்கள். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தோஹாவில் உள்ள மால் ஒன்றில் செயல்பட்டு வந்த இந்த உணவகத்தில் குண்டு வெடித்ததில் ரியாஸ் கிழக்கேமேனோலில், அப்துல் சலீம் பலங்காட், ஜகாரியா பதிஞ்சாரே அனகண்டி, வெங்கடேஷ் மற்றும் ஷேக் பாபு என்ற 5 இந்தியர்களும், 4 நேபாளிகள் மற்றும் 2 பிலிப்பைன்ஸ் நாட்டினரும் கொல்லப்பட்டனர்.
அங்குள்ள இந்திய தூதர் சஞ்சிவ் அரோரா விபத்தில் பலியானவர்களை இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 10 பேரில் 8 ஆண்களும் 2 குழந்தைகளும் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவராவார்.
அந்நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வைவிட்டனர். ஆனால் வெடித்தது குண்டா அல்லது உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரா என சந்தேகம் எழுந்துள்ளது.
No comments: