அதிர்ஷ்ட தேவதை தீபிகா தான் காரணம்! தினேஷ் கார்த்திக்
ஐபில் போட்டிக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனது, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தது எல்லாம் என் அதிர்ஷ்ட தேவதை வந்த நேரம் தான் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்(வயது 28).
இதுவரை 67 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பின்பும், அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
ஏனெனில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி, விக்கெட் கீப்பராகவும் இருப்பது தான்.
இருப்பினும் துடுப்பாட்ட வீரராக அணியில் இடம் பெற்ற போதும், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்தியாவின ‘நம்பர்–1’ ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லீகலுடன் காதலில் விழுந்தார், கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ. 12.5 கோடிக்கு டில்லி அணியால் வாங்கப்பட்டார்.
தற்போது, ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து டோனி விலக, விக்கெட் கீப்பர் என்ற முறையில் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்கிற்கு வந்தது.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், கிரிக்கெட் வீரர் என்ற முறையில் தேசிய அணிக்காக விளையாடுவது தான் ஒவ்வொரு வீரருக்கும் கனவாக இருக்கும், இதைவிட சிறப்பானது வேறெதுவும் இல்லை.
அணியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட பின், தமிழக அணிக்காக போட்டிகளில் பங்கேற்றேன்.
கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு, இரானி கோப்பை போட்டியில், ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிக்காக விளையாடினேன்.
அப்போது தான் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 12.5 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது தெரியவந்தது.
இந்த அணி பயிற்சியாளர் கிறிஸ்டன் மிகவும் வியக்கத்தக்க திறமை பெற்றவர், அனுபவம் வாய்ந்த இவருடன் இணைந்து செயல்பட உள்ளதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், தற்போது மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த நல்ல விஷயங்கள் எல்லாமே தீபிகா பல்லீகலை திருமண நிச்சயம் செய்த பிறகு தான் கிடைத்தது.
உண்மையில் எனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
No comments: