Header Ads

கவுண்டமணி, வடிவேலு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடிக்கும் படம் '49-ஓ'. இதை கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆரோக்கிய தாஸ் இயக்குகிறார்.

வடிவேலு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடிக்கும் படம் 'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்'. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



இந்த இரண்டு படங்களுமே ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் ஒரே நாளில் ரிலீஸ் செய்துவிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கவுண்டமணி மற்றும் வடிவேலுவிற்கு அதிக அளவில் ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், இந்த இரண்டு படங்களும் திட்டமிட்டபடி ஒரே நாளில் வெளியானால் ரசிகர்களுக்கு இரட்டைத் திருவிழாவாக இருக்கும்.

No comments:

Powered by Blogger.